தேசியம்
செய்திகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை கனேடிய நாடாளுமன்றம் அங்கீகரித்தது

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை கனேடிய நாடாளுமன்றம் உலகின் முதல் தேசிய நாடாளுமன்றமாக அங்கீகரித்தது.

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை கனேடிய நாடாளுமன்றம் புதன்கிழமை (18) ஏகமனதாக அங்கீகரித்தது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினமான இந்த முக்கிய நாளில், ஒவ்வொரு ஆண்டும் May மாதம் 18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக கனேடிய நாடாளுமன்றம் உலகின் முதல் தேசிய நாடாளுமன்றமாக அங்கீகரித்தது.

Scarborough Rouge Park தொகுதியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி இந்த பிரேரணையை புதன் மாலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இதை அங்கீகரிப்பதன் மூலம் கனேடிய நாடாளுமன்றம் ஒவ்வொரு ஆண்டின் May மாதம் 18ஆம் திகதியையும் தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக அங்கீகரித்தது.

இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளானவர்களுக்கும் இது சற்று ஆறுதல் அளிக்கும் என நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

இது தமிழ் சமூகத்தின் பல உறுப்பினர்களின் பல வருட கடின உழைப்பினால் சாத்தியமானது என புதன் மாலை நாடாளுமன்ற செய்தியாளர் சந்திப்பு அறையில் நிகழ்ந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தேசியத்திடம் அவர் கூறினார்.

இந்த பிரேரணையை ஆதரித்த Conservative கட்சி, Bloc Quebecois, புதிய ஜனநாயகக் கட்சி, பசுமைக் கட்சி உட்பட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் எனவும் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

Related posts

வருடாந்த பணவீக்கம் January மாதம் குறைந்தது

Lankathas Pathmanathan

B.C. உலங்குவானுர்தி விபத்தில் இருவர் பலி – நால்வர் காயம்

Lankathas Pathmanathan

Booster தடுப்பூசியை பெற்றுக் கொண்ட பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment