தேசியம்
செய்திகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவு கூறும் கனேடிய அரசியல் தலைவர்கள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவு கூறும் வகையில் கனேடிய அரசியல் தலைவர்கள் பலரும் அறிக்கைகளை வெளியிட்டனர்.

முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட 26 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தின் போது உயிரிழந்த உயிர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகிறோம் என பிரதமர் Justin Trudeau தனது அறிக்கையில் தெரிவித்தார்.

அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் செயல்முறையை அமைப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை நிறைவேற்றுமாறு இலங்கைக்கு கனடா தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ளது எனவும் Trudeau குறிப்பிட்டார்.

தமிழ் இனப்படுகொலை நினைவு நாளில், இலங்கை அரசால் படுகொலை செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவு கூறுகின்றோம் என புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் Jagmeet Singh தெரிவித்தார்.

Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Garnett Genuis ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

Conservative கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் Pierre Poilievre, Brampton நகர முதல்வர் Patrick Brown, Jean Charest ஆகியோரும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை குறிக்கும் அறிக்கைகளை வெளியிட்டனர்.

 

தமிழ் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களை நினைவு கூறுகின்றோம் என Ontario மாகாண புதிய ஜனநாயக கட்சியின் தலைவி Andrea Horwath தெரிவித்தார்.

அரச அனுசரணை வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை நினைவு கூருகிறோம் Ontario மாகாண எதிர்க்கட்சி துணை தலைவர் Gurratan Singh தெரிவித்தார்.

Ontario மாகாண சபை உறுப்பினர் விஜய் தணிகாசலம், NDP வேட்பாளர் நீதன் சான் ஆகியோரும் அறிக்கைகளை வெளியிட்டனர்.

Toronto நகர முதல்வர் John Tory முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவு கூர்ந்தார்.

Brampton நகரசபை தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை Bramptonனில் பிரகடனப்படுத்தியது.

தவிரவும் தேசிய,மாகாண, நகர சபை உறுப்பினர்கள் பலரும் முள்ளிவாய்க்கால் படுகொலையை பல்வேறு வகைகளிலும் நினைவு கூர்ந்தனர்.

Related posts

இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற கனடா

Lankathas Pathmanathan

Albertaவிற்கு உதவ வளங்களை அனுப்பும் கனேடிய ஆயுதப்படைகள்!

Gaya Raja

ஒரே நாளில் 27 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுகள்

Lankathas Pathmanathan

Leave a Comment