உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு காரணமாக அனுமதி மறுக்கப்பட்ட ரஷ்ய பிரஜைகள் நாட்டிற்குள் நுழைவதை தடை செய்ய கனடா நடவடிக்கை எடுத்து வருகிறது.
பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino செவ்வாய்க்கிழமை (17) இந்த நடவடிக்கையை அறிவித்தார்.
கனேடிய அரசாங்கம் மேற்கத்திய நட்பு நாடுகளுடன் இணைந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது.
கனடிய மேல் சபையில் அரசாங்கத்தின் பிரதிநிதி Senator Marc Gold செவ்வாய்க்கிழமை இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
இந்த மாற்றங்கள் கனடா எல்லை சேவைகள் அதிகாரிகள் தடைகளுக்கு உட்பட்ட தனிநபர்களின் நுழைவை மறுக்கவும் அவர்களை நாட்டில் இருந்து அகற்றவும் அனுமதிக்கிறது.
அதேவேளை குடியேற்ற அதிகாரிகள் visa கோரிக்கைகளை மறுக்கவும் அனுமதிக்கிறது.
இந்த மசோதாவை முதலில் மேல் சபையில் அறிமுகப்படுத்துவதன் மூலம் அதனை விரைவாக நிறைவேற்ற உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.