தேசியம்
செய்திகள்

பதவி இழப்பாரா Alberta முதல்வர்?

Alberta முதல்வர் Jason Kenney குறித்த அவரது கட்சி உறுப்பினர்களின் தலைமை ஆய்வு முடிவுகள் புதன்கிழமை (18) மாலை வெளியாகவுள்ளன.
இந்த தலைமை மதிப்பாய்வில் Kenney தலைவராக தொடர வேண்டுமா என்பது குறித்து 59 ஆயிரம் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் ஒரு மாத கால அஞ்சல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
பதிவான இந்த வாக்குகளை புதன் மாலை முதல் எண்ணவுள்ளதாக United Conservative கட்சி ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
இந்த வாக்கு எண்ணிக்கை முடிவுகளை கட்சியின் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
50 சதவீதத்துடன் மேலதிகமாக ஒரு வாக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் Kenney பதவி விலகி, தலைமைப் போட்டிக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.
ஆனாலும் ஒரு சிறிய அளவிலேனும் பெரும்பான்மை கிடைத்தாலும் தலைமையில் தொடரவுள்ளதாக Kenney ஏற்கனவே கூறியுள்ளார்.
இந்த முடிவுகள் குறித்து பேச Kenney திட்டமிட்டுள்ளதாக முதல்வரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

Ontarioவில் COVID booster தடுப்பூசிகளின் விரிவாக்கம் குறித்த அறிவித்தல்

Edmonton வணிக வளாக துப்பாக்கி சூட்டில் இருவர் பலி

Lankathas Pathmanathan

உக்ரைனுக்கு மேலதிக கடன் உதவி வழங்கும் கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment