தேசியம்
செய்திகள்

விபத்தில் பயணி உயிரிழந்ததை அடுத்து தமிழரான சாரதி மீது குற்றச்சாட்டு பதிவு

Toronto விபத்தில் பயணி உயிரிழந்ததை அடுத்து தமிழரான சாரதி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

இரண்டு மாதங்களுக்கு முன்னர் Torontoவில் இடம்பெற்ற விபத்தில் வாகனத்தில் பயணித்த 19 வயதான பெண் ஒருவர் கொல்லப்பட்டார்.

March மாதம் 6ஆம் திகதி Lake Shore Boulevard West and Jameson Avenue சந்திப்புக்கு அருகாமையில் இந்த விபத்து நிகழ்ந்தது.

இதனை அடுத்து 30 வயதான Oshawaவை சேர்ந்த குமரன் சங்கர்குமார் கைது செய்யப்பட்டு அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், வாகனத்தில் பயணித்த 19 வயதுடைய பெண் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சனிக்கிழமை (14) கைது ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை யினர் தெரிவித்தனர்.

கைதான வாகன ஓட்டுநர் மீது, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிச் சென்றதால் மரணத்தை ஏற்படுத்தியதாகவும், மதுபோதையில் வாகனம் ஓட்டிச் சென்றதால் மரணத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர் July மாதம் 14ஆம் திகதி Toronto நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.

இவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வட்டி விகிதங்களை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலை தோன்றலாம்?

Lankathas Pathmanathan

New Brunswick சுகாதார அமைச்சர் பதவியில் மாற்றம்

Lankathas Pathmanathan

பொது தேர்தலின் முதலாவது விவாதம்!

Gaya Raja

Leave a Comment