February 22, 2025
தேசியம்
செய்திகள்

தமிழர் பலியான சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Mississaugaவில் தமிழர் ஒருவர்  வாகனத்தால் மோதப்பட்டு பலியான சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த Decemberரில் Mississaugaவில் 35 வயதான சுரேஷ் தர்மகுலசிங்கம் என்பவர் வாகனத்தால்  மோதப்பட்டார்.

பாதிக்கப்பட்டவருக்கு எந்த உதவியும் செய்யாமல், சம்பவ இடத்தில் நிறுத்தாமல் வாகன சாரதி தப்பி சென்றதாக கூறப்பட்டது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சுரேஷ் தர்மகுலசிங்கம், ஒரு வாரத்தின் பின்னர் மரணமடைந்தார்
இந்த சம்பவம் குறித்து தொடர்ந்த விசாரணையை அடுத்து 38 வயதான Luke Conklin என்பவர் மீது Toronto காவல்துறையினர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர்
இவர் July மாதம் 25ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Markham விடுதியில் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தை

Lankathas Pathmanathan

கனடா இழிவான முறையில் செயல்படுகிறது: சீன அரசாங்கம் குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

Quebecகில் சுகாதாரப் பணியாளர்களும் சமூக சேவை தொழிலாளர்களும் தடுப்பூசி பெறுவதற்கு காலக்கெடு!

Gaya Raja

Leave a Comment