பாப்பரசர் Francis July மாதத்தின் இறுதியில் கனடாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
வெள்ளிக்கிழமை (13) இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை Vatican வெளியிடவுள்ளது.
இந்த விஜயத்தின் போது பாப்பரசர் Edmonton, Quebec City, Iqaluit ஆகிய இடங்களுக்கு செல்லவுள்ளார்.
April மாதத்தின் ஆரம்பத்தில் கனடிய முதற்குடிகளுடனான சந்திப்பின் போது போப்பாண்டவர் கனடாவுக்கு வரும் திட்டத்தை முதலில் அறிவித்தார்.
இதன் போது கனடாவின் வதிவிட பாடசாலைகளில் ரோமன் கத்தோலிக்க திருச்சபை உறுப்பினர்களின் செயல்களுக்கு போப் பிரான்சிஸ் மன்னிப்பு கோரியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.