February 23, 2025
தேசியம்
செய்திகள்

உக்ரேனியர்கள் பயணித்த மற்றும் ஒரு விமானம் கனடாவை வந்தடைந்தது

166 உக்ரேனியர்கள் அடங்கிய விமானம் ஒன்று திங்கட்கிழமை (09) மாலை Newfoundland and Labradorரை வந்தடைந்தது.

கனடிய அரசாங்கம் ஏற்பாடு செய்த இந்த விமானம் போலந்தில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது.

இந்த விமானத்தை Newfoundland and Labrador முதல்வர் Andrew Furey வரவேற்றார்.

இந்த விமானத்தில் பயணித்தவர்களில் 55 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

இந்த ஆண்டு இதுவரை 19 ஆயிரம் உக்ரைனியர்கள் கனடாவை வந்தடைந்துள்ளதாக கனடா எல்லை சேவைகள் நிறுவனம் தெரிவித்தது.

Related posts

St. Lawrence ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் அடையாளம்

Lankathas Pathmanathan

கனடிய செய்திகள் – October மாதம் 20ஆம் திகதி செவ்வாய்கிழமை

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசன பகிர்வு கணிப்பு – May 25, 2022 (புதன் )

Lankathas Pathmanathan

Leave a Comment