COVID தொற்றின் நீண்ட கால பாதிப்பை எதிர் கொள்பவர்கள் குறித்து கண்டறியும் முயற்சியில் கனடிய பொது சுகாதார நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
கனடாவின் பொது சுகாதார நிறுவனம், கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் ஆகியவை COVID தொற்றுக்குப் பின்னர் மக்கள் நீடித்த விளைவுகளை உணர்வது எவ்வளவு பொதுவானது என்பதை கண்டறிய ஒரு கணக்கெடுப்பை ஆரம்பித்துள்ளனர்.
இதனை அடையாளம் காண்பது, கண்காணிப்பது கடினமாக இருக்கும் என கூறப்படுகின்றது.
தொற்றுடன் தொடர்புடைய 100க்கும் மேற்பட்ட அறிகுறிகள் இருப்பதாக பொது சுகாதார நிறுவனம் கூறுகிறது.
இந்த நிலையில் நீண்ட கால COVID தொற்றின் தாக்கம் கணிசமானதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம் என தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Theresa Tam கூறினார்.