Ontario மாகாண சபை தேர்தலில் ஐந்து தமிழர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Progressive Conservative கட்சியின் சார்பில் இருவர், NDP சார்பில் இருவர், Liberal கட்சியின் சார்பில் ஒருவர் என மொத்தம் ஐந்து தமிழர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
PC கட்சியின் சார்பில் Scarborough – Rouge Park தொகுதியில் மீண்டும் விஜய் தணிகாசலம் போட்டியிடுகின்றார்.

Markham – Thornhill தொகுதியில் PC கட்சியின் சார்பில் லோகன் கணபதி போட்டியிடுகின்றார்.

NDP கட்சியின் சார்பில் Scarborough Centre தொகுதியில் நீதன் சான் போட்டியிடுகின்றார்

Markham – Unionville தொகுதியில் NDP வேட்பாளராக செந்தில் மகாலிங்கம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Liberal கட்சியின் சார்பில் Scarborough North தொகுதியில் அனிதா ஆனந்தராஜன் போட்டியிடுகின்றார்.
