December 12, 2024
தேசியம்
செய்திகள்

புதன்கிழமை ஆரம்பமாகும் Ontario மாகாண தேர்தல் பிரச்சாரம்

Ontario மாகாண தேர்தலுக்கான உத்தியோகபூர்வ பிரச்சாரம் புதன்கிழமை (04) ஆரம்பமாகிறது.

இந்த நிலையில் மூன்று பிரதான கட்சிகளின் தலைவர்களும் வார விடுமுறையில் தேர்தல் பிரச்சார நிகழ்வுகளை முன்னெடுத்தனர்.

Etobicokeவில், Ontario Progressive Conservative கட்சித் தலைவர் Doug Ford  தனது பிரச்சார பேருந்தை சனிக்கிழமை அறிமுகப்படுத்தினார்.

Ford  தனது பிரச்சாரத்தை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்க உள்ளார்.

Hamiltonனில், Ontario புதிய ஜனநாயகக் கட்சித் தலைவி Andrea Horwath  தனது தேர்தல் பிரச்சாரத்தை சனிக்கிழமை ஆரம்பித்தார்.

சனிக்கிழமையன்று, NDP அதன் தேர்தல் பிரச்சாரப் பேருந்தை  அறிமுகப்படுத்தியது.

Ontario Liberal கட்சித் தலைவர் Steven Del Duca, சனிக்கிழமை Woodbridgeசில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தார்

Ontario மாகாண தேர்தல் June மாதம் 2ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் Progressive Conservative கட்சியின் சார்பில் இரண்டு,  NDP சார்பில் ஒன்று, Liberal கட்சியின் சார்பில் ஒன்று என மொத்தம் நான்கு தமிழர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஒரு தமிழர் NDP சார்பில் விரைவில் வேட்பாளராக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

Ontarioவில் வாகனக் காப்பீட்டு கட்டணங்களை குறைக்க NDP திட்டம்

Lankathas Pathmanathan

நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்திவைப்பது குறித்து பரிசீலிக்கவில்லை: அமைச்சர் Chrystia Freeland

Lankathas Pathmanathan

லெபனானில் உள்ள கனடியர்களை வெளியேற ஆலோசனை

Lankathas Pathmanathan

Leave a Comment