Montrealலில் அமையவுள்ள Moderna தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலை கனடாவை mRNA தடுப்பூசிகளின் தலைநகராக மாற்றும் என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.
Modernaவின் புதிய தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலை Montreal நகரில் அமையும் என வெள்ளிக்கிழமை (29) அறிவிக்கப்பட்டது
இது கனடாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் நீண்ட கால விநியோகத்தை உறுதிப்படுத்தும் என Moderna நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
கனடாவில் தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான திறனை வலுப்படுத்த அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு உறுதியளித்துள்ளது என பிரதமர் தெரிவித்தார்.
இந்த தொழிற்சாலை, 2024ல் செயல்பாட்டுக்கு வரும் எனவும் 200 முதல் 300 பேர் வரை இங்கு பணிபுரிவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு ஆண்டொன்றுக்கு 100 மில்லியன் COVID தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியும் எனவும் Trudeau கூறினார்.
Montrealலில் தயாரிக்கப்படும் Moderna தடுப்பூசிகளை பெறும் முதல் நாடாக கனடா இருக்கும் என புத்தாக்க அமைச்சர் Francois-Philippe Champagne தெரிவித்தார்.