December 12, 2024
தேசியம்
செய்திகள்

‘Rolling Thunder’  பேரணி, சுதந்திர தொடரணி trucker போராட்டங்கள் போல் அமையாது: Ottawa காவல்துறை

வெள்ளிக்கிழமை (29)  Ottawaவில் ஆரம்பமாகும் ‘Rolling Thunder’  எதிர்ப்பு பேரணி, இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நடைபெற்ற சுதந்திர தொடரணி trucker போராட்டங்கள் போல் அமையாது என Ottawa காவல்துறை தலைவர் உறுதியளித்தார்.
Ottawa நகரம் மற்றொரு போராட்டத்திற்குத் தயாராகி வரும் நிலையில், இந்த கருத்தை  இடைக்கால காவல்துறைத் தலைவர் Steve Bell  கூறினார்.
இந்த நிலையில் Ottawa நகரம் இந்த போராட்டத்தை எதிர்கொள்ள முன்பிருந்ததை விட சிறப்பான நிலையில் உள்ளதாக நகர முதல்வர் Jim Watson தெரிவித்தார்.
 ‘Rolling Thunder’  எதிர்ப்பு பேரணியின் வாகனங்கள் Ottawa நகரத்தில் இருந்து தடை செய்யப்படும் என ஏற்கனவே காவல்துறையினர்  அறிவித்திருந்தனர்.
வார இறுதியில் Ottawa காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து RCMP, OPP அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளனர்.
800க்கும் மேற்பட்ட RCMP அதிகாரிகள் Ottawa காவல்துறைக்கு உதவ ஒப்புதல் அளித்துள்ளனர்.

Related posts

உக்ரைனில் ஆயுத மோதல் ஏற்படலாம்: கனடிய பிரதமர் அச்சம்

Lankathas Pathmanathan

Alberta பயணமான பிரதமர் Justin Trudeau !

Gaya Raja

Ontarioவில் 4,000க்கு மேல் பதிவான தொற்றுகள்!

Lankathas Pathmanathan

Leave a Comment