பிரதமர் Justin Trudeau குற்றம் இழைத்தாரா என்பதை ஆராய்ந்த விசாரணையை RCMP மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என Conservative கட்சி வலியுறுத்துகிறது.
Aga Khanனுக்குச் சொந்தமான தனியார் Bahamas தீவில் இலவச விடுமுறையை ஏற்றுக் கொண்டதன் மூலம் Trudeau குற்றம் இழைத்தாரா என்பதை ஆராய்ந்த விசாரணை நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் முடிவடைந்தது.
இந்த விசாரணையை RCMP மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என Conservative கட்சியின் இடைக்கால தலைவர் Candice Bergen கோரியுள்ளார்.
இந்த பயணம் குறித்து 2017ஆம் ஆண்டு ஆராய்ந்த மத்திய நெறிமுறைகள் ஆணையர், பிரதமர் விதிகளை மீறியதாக கூறியிருந்தார் .
இந்த விடயத்தில் புதிய ஆதாரம் இருப்பதாக கூறும் Bergen, RCMP குற்ற விசாரணையை தொடர வேண்டும் என கோருகின்றார்.
Aga Khan, கனடிய மத்திய அரசிடம் பணத்தை பெற்ற தொண்டு நிறுவனத்தை நிறுவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.