தேசியம்
செய்திகள்

Rolling Thunder எதிர்ப்பு பேரணி வாகனங்கள் Ottawa நகரத்தில் இருந்து தடை செய்யப்படும்

Rolling Thunder எதிர்ப்பு பேரணியின் வாகனங்கள் Ottawa நகரத்தில் இருந்து தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வார இறுதியில் ‘Rolling Thunder Ottawa’  ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக போராட்டக்காரர்கள் நகரின் மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என Ottawa காவல்துறை கூறுகிறது.

வெள்ளிக்கிழமை (29) ஆரம்பமாகும் இந்த நிகழ்வில் சுமார் 500 முதல் 1,000 மோட்டார் சைக்கிள்கள் உட்பட பிற வாகனங்கள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடந்த சுதந்திரத் தொடரணி  போராட்டத்தைப் போலல்லாமல், இம்முறை பங்கேற்பாளர்கள் நகரின் மையத்திற்குள்  நடந்து செல்ல வேண்டும் என Ottawa காவல்துறையின் இடைக்கால தலைவர் Steve Bell கூறினார்.

கடந்த சில மாதங்களாக Ottawa நகரத்தில் நடந்தவற்றின் அடிப்படையில், மத்திய பகுதியில் வாகனம் சார்ந்த போராட்டங்கள் நடக்கக் கூடாது என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம் என அவர் கூறினார்.

வார இறுதியில் Ottawa காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து RCMP, OPP அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளனர்.

Related posts

சிறப்பு அறிக்கையாளர் David Johnston தொடர்ந்து பதவியில் இருப்பார்: Justin Trudeau

Lankathas Pathmanathan

பொது சுகாதார உத்தரவுகளை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்கும் Manitoba

Lankathas Pathmanathan

CSIS பணியிட துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள்  ஏற்றுக்கொள்ள முடியாதவை

Lankathas Pathmanathan

Leave a Comment