December 12, 2024
தேசியம்
Ontario தேர்தல் 2022கட்டுரைகள்

வேட்பாளர்கள் தேவை! Ontario மாகாண சபை தேர்தலில் போட்டியிட விருப்பமா?

தேர்தல் வாக்களிப்புக்கு 40 நாட்கள் வரையே உள்ள நிலையில் Liberal, புதிய ஜனநாயக கட்சி (NDP), பசுமை கட்சிகள் தொடர்ந்தும் வேட்பாளர்களை தேடுகின்றனர்.

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் NDP இன்னும் 35 வேட்பாளர்களை நியமிக்க வேண்டும்.

தேர்தல் பிரச்சாரம் அதிகாரப்பூர்வமாக May 4ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு இன்னும் இரண்டு வாரங்கள்  உள்ள நிலையில் Liberal கட்சி 20 தொகுதிகளில் யார் போட்டியிடுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்,

Ontario PC கட்சிக்கு, மாகாணம் முழுவதும் உள்ள மொத்த 124 தொகுதிகளில், ஒரு வேட்பாளர் மட்டுமே தேவைப்படுவதாக நம்பப்படுகிறது.

Ontarioவின் பசுமைக் கட்சிக்கு இதுவரை 78 வேட்பாளர்கள் உள்ளனர், 46 பேர் மேலும் தேவைப்படுகின்றனர்.

Ontario PC கட்சி

27 ஆண்டுகளாக Haldimand-Norfolk தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய மாகாண சபை உறுப்பினர் Toby Barrettக்கு மாற்று வேட்பாளரை PC கட்சி விரைவாக நியமித்தது. மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என Barrett வார இறுதியில் அறிவித்தார். இவருக்கு பதிலாக Haldimand County நகர முதல்வர் Ken Hewitt போட்டியிடவுள்ளார்.

Ontario PC கட்சி தனது கடைசி சில வேட்பாளர்களை இறுதி செய்து வருகிறது

Ontario PC கட்சி தனது கடைசி சில வேட்பாளர்களை இறுதி செய்து வருகிறது என்கிறார் கட்சியின் தகவல் தொடர்பு இயக்குனர் Christina Wramhed.  PC கட்சி ஒரு தொகுதியில் மட்டுமே வேட்பாளரை நியமிக்க வேண்டும்.

புதிய ஜனநாயக கட்சி

NDP மொத்தம் 89 வேட்பாளர்களை இதுவரை இறுதி செய்துள்ளது

எதிர் கட்சியான NDP மொத்தம் 89 வேட்பாளர்களை இதுவரை இறுதி செய்துள்ளது. வரும் நாட்களில் மேலும் பல வேட்பாளர்கள் உறுதி செய்யப்படவுள்ளனர்.

மாகாண சபை உறுப்பினர் Paul Miller கட்சியில் இருந்து விலத்தப்பட்ட நிலையில், East-Stoney Creek தொகுதியில் Zaigham Butt புதிய வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். Toronto மத்திய தொகுதியில் Suze Morrisonனுக்கு மாற்றான வேட்பாளரான பிரபல நகர சபை உறுப்பினர் Kristyn Wong-Tam நியமிக்கப்பட்டார்.

Liberal கட்சி

5 ஆண்டுகள் ஆட்சி செய்த Liberal கட்சி, 2018 பொது தேர்தலில் வெறும் ஏழு தொகுதிகளில் மாத்திரம் வெற்றி பெற்றது.

தேர்தல் பிரச்சாரம் ஆரம்பிக்கும் போது கட்சியின் முழுமையான வேட்பாளர் பட்டியல் தயாராகிவிடும்

Liberal கட்சியின் புதிய தலைவர் Steven Del Duca “எங்கள் வேட்பாளர்களில் குறைந்தபட்சம் 50 சதவீதம் பேர் பெண்களாக இருப்பார்கள்” என உறுதியளித்திருந்தார். அந்த இலக்கை முதல் தடவையாக Liberal கட்சி சில நாட்களுக்கு முன்னர் அடைந்தது. தேர்தல் பிரச்சாரம் ஆரம்பிக்கும் போது கட்சியின் முழுமையான வேட்பாளர் பட்டியல் தயாராகிவிடும் என Del Duca உறுதியளித்துள்ளார்.

June மாத தேர்தலுக்கு; May 1 அல்லது அதற்கு அண்மையாக முழுமையான  அல்லது ஏறக்குறைய முழுமையான வேட்பாளர்கள் பட்டியல் இல்லை என்றால் அது ஆச்சரியமான விடயமாக இருக்கும்.

Related posts

பொங்கல் நிகழ்வு ஒத்திவைப்பு CTC முன்னெடுக்கும் ஒரு “தற்காலிக கவனச்சிதறல்” முயற்சி!

Lankathas Pathmanathan

வர்ண ராமேஸ்வரன்: இசைக்கு எல்லை வகுக்காக் கலைஞன்

Gaya Raja

தேசியத்தின் ஆசன பகிர்வு கணிப்பு – May 25, 2022 (புதன் )

Lankathas Pathmanathan

Leave a Comment