தேசியம்
செய்திகள்

சுயேச்சை உறுப்பினராக செயற்படவுள்ள NDP மாகாண சபை உறுப்பினர்

Ontario சட்டமன்றத்தில் சுயேச்சை உறுப்பினராக செயற்படவுள்ளதாக Brampton வடக்கு மாகாண சபை உறுப்பினர் Kevin Yarde தெரிவித்துள்ளார்.

தனது குடும்பத்தினருடன் ஆலோசித்த பின்னர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

NDP மாகாணசபை உறுப்பினரான இவர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை மற்றுமொரு போட்டியாளரிடம் இழந்திருந்தார்.

மாகாண சபை உறுப்பினர்கள் தங்கள் கட்சிகளுக்குள் வேட்புமனு போட்டியில் ஈடுபடுவ அரிதானது.

2018 இல் Brampton வடக்கு தொகுதியை வெற்றி பெற்ற பின்னர், Peel பிராந்தியத்தில் முதல் கறுப்பின மாகாண சபை உறுப்பினர் ஆனார்.

எதிர்வரும் June மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் Yarde சுயேச்சை உறுப்பினராக போட்டியிடுவாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

June மாதம் 3ஆம் திகதி வரை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

British Colombiaவில் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர்

Lankathas Pathmanathan

Peel பிராந்திய பாடசாலைகள் நேரடி கல்விக்கு மூடப்படுகின்றன

Gaya Raja

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக Air இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment