COVID தொற்றின் பின்னர் முதல் முறையாக ஒரு வாரத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் கனடாவை வந்தடைந்துள்ளனர்.
COVID எல்லைக் கட்டுப்பாடுகளை கனடிய அரசாங்கம் தளர்த்தியது பயணிகளை மீண்டும் கனடாவுக்குள் ஈர்த்துள்ளதாக கூறப்படுகின்றது.
April 11 வாரத்தில், 1 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கனடா எல்லை சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், 2019ஆம் ஆண்டின் April 15 முதல் 17 வரையிலான காலகட்டத்தில் இருந்து பயணிகளின் எண்ணிக்கை சுமார் 44 சதவீதம் குறைந்துள்ளது.
கனடாவில் சுற்றுலா செலவு 2020ல் இருந்து 2021 இல் 4.4 சதவீதம் உயர்ந்தது.