February 23, 2025
தேசியம்
செய்திகள்

சர்வதேச பட்டதாரிகள் மேலும் 18 மாதங்கள் கனடாவில் தங்கியிருக்கலாம்!

சர்வதேச பட்டதாரிகளை மேலும் 18 மாதங்கள் கனடாவில் தங்கியிருக்க கனடிய  மத்திய அரசாங்கம்  அனுமதிக்கவுள்ளது.

கனேடிய உயர் நிலை கல்லூரிகளில் பட்டம் பெற்ற சர்வதேச மாணவர்கள், நிரந்தரக் குடியுரிமைக்கு தகுதி பெறுவதற்கு தற்காலிகத் திட்டத்தை மத்திய அரசு வழங்கியுள்ளதால், அவர்கள் கனடாவில் நீண்ட காலம் தங்கக்கூடிய  நிலை தோன்றியுள்ளது.

குடிவரவு அமைச்சர்  Sean Fraser வெள்ளிக்கிழமை (22) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

எதிர்வரும் கோடை காலம் முதல், 2022 இல் காலாவதியாகும் பணி அனுமதியுடன் உள்ள பட்டதாரிகள் 18 மாதங்கள் வரை நீட்டிப்புக்கு தகுதி பெறுவார்கள் என  அமைச்சர் Fraser தெரிவித்தார்.

விரைவுபடுத்தப்பட்ட செயல்முறை குறித்த விவரங்கள் இறுதி செய்யப்படவில்லை என கூறிய அமைச்சர், எதிர்வரும் வாரங்களில் அவை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.

நிரந்தர குடியிருப்பாளர்களாக மாற விரும்பும் நபர்களுக்காக July மாதம் express  நுழைவு குலுக்கல்கள் மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாகவும் அமைச்சர் Fraser அறிவித்தார்.

Related posts

கனடாவின் பெரும்பாலான பகுதிக்கும் கடுமையான குளிர் எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Greenbelt திட்டங்கள் குறித்த முடிவு தவறு : Doug Ford

Lankathas Pathmanathan

இரண்டு நாடுகளுக்கான சாத்தியத்தை இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் அதிகரித்துள்ளது?

Lankathas Pathmanathan

Leave a Comment