உக்ரேன் மீதான தூண்டுதலற்ற ஆக்கிரமிப்புக்கு எதிராக ரஷ்யா G20 நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland கூறினார்.
இந்த வாரம் Washingtonனில் நடைபெற்ற G20 நாடுகளின் நிதி அமைச்சர்கள், மத்திய வங்கியாளர்களின் சந்திப்புகளின் போது இது ஒரு முக்கிய விவாதப் பொருளாக இருந்தது.
உக்ரைனில் ரஷ்யாவின் சட்டவிரோதப் போர் உலகப் பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ளதாக Freeland குற்றம் சாட்டினார்.
இந்த விடயத்தில் அனைத்து நாடுகளுக்கும் இடையில் ஒருமனதான உணர்வு இல்லை என வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற நிறைவு செய்தி மாநாட்டின் போது Freeland சுட்டிக்காட்டினார்.
G20 நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில் ரஷ்ய நிதியமைச்சர் உரையாற்ற முனைந்தபோது அதனை எதிர்த்து Freeland உள்ளிட்ட கனேடிய அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.