கனடிய நாடாளுமன்ற அமர்வுகளில் பொதுமக்கள் கலந்து கொள்வது மீண்டும் அனுமதிக்கப்படவுள்ளது.
நாடாளுமன்ற அமர்வுகளில் பொதுமக்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ள COVID காரணமாக விதிக்கப்பட்டிருருந்த தடை நீக்கப்படுகிறது.
பொதுமக்களுக்காக பார்வையாளர் பகுதி எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்று முதல் பொது மக்கள் நாடாளுமன்ற விவாதங்களை நேரில் பார்க்க அனுமதி வழங்கப்படும்.
அடுத்த மாதம், நாடாளுமன்றத்தின் வழிகாட்டுதல் சுற்றுப்பயணங்கள் மீண்டும் ஆரம்பமாகின்றன.