கனடாவில் வதிவிட பாடசாலைகளில் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தீங்குகளை போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டதாக Manitobaவைச் சேர்ந்த Metis குழு கூறுகிறது.
வியாழக்கிழமை (21) வத்திக்கானில் போப் பிரான்சிசை Manitoba Metis குழு சந்தித்தது.
இந்த சந்திப்பு மிகவும் சக்திவாய்ந்ததாக அமைந்ததாக Manitoba Metis கூட்டமைப்பின் தலைவர் David Chartrand கூறினார்.
Metis, Inuit, முதற்குடி பிரதிநிதிகளுடனான சந்திப்புகளைத் தொடர்ந்து போப் ஆண்டவர் இந்த மாத ஆரம்பத்தில் வத்திக்கானில் மன்னிப்புக் கோரியிருந்தார்.
இந்த நிலையில் Manitoba Metis கூட்டமைப்பு பிரான்சிசு டன் ஒரு தனி சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.