March மாத இறுதியில் இருந்து நாடு முழுவதும் COVID தொற்றின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
சில மாகாணங்களில் முகமூடி தேவைகள், தடுப்பூசிக்கான ஆதாரம் உள்ளிட்ட பொது சுகாதார கட்டுப்பாடுகளை நீக்கிய நிலையில் இந்த அதிகரிப்பு எதிர்பார்க்கப்பட்டது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
அண்மைய தொற்றின் அதிகரிப்பு, மருத்துவமனையில் அனுமதிக்கப் படுபவர்களின் அதிகரிப்பு நாடு முழுவதும் உள்ள சுகாதாரப் பணியாளர்களை பெரிதும் பாதிக்கிறது.
தொற்றின் ஆறாவது அலையுடன் மாகாணங்கள் போராடுகையில், அதிகரித்து வரும் எண்ணிக்கையில் மருத்துவர்கள், செவிலியர்கள், பிற மருத்துவமனை ஊழியர்கள் COVID தொற்றினால் நோய் வாய்ப்பட்டுள்ளனர்.
இந்த நிலை, நோயாளிகளுக்கான சிகிச்சையின் தன்மை, தரம் குறித்த கவலைகளை எழுப்புகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை April முதல் வாரத்தில் 4,200க்கும் அதிகமாக இருந்து 5,100க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் தொற்றின் எண்ணிக்கை 35 இலட்சத்து 90 ஆயிரத்தையும், மரணங்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.
கனடாவில் முதலாவது COVID தடுப்பூசி சுமார் 32.4 மில்லியன் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
31.2 மில்லியன் பேர் இரண்டாவது தடுப்பூசியும், 18.3 மில்லியன் பேர் மூன்றாவது தடுப்பூசியும் பெற்றுள்ளனர்.