கனடியர்கள் தொடர்ந்து முகமூடி அணிய வேண்டும் என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Theresa Tam அறிவுறுத்துகின்றார்.
தொற்றின் கடுமையான விளைவுகளை தடுக்க மூன்றாவது COVID தடுப்பூசியை பெற வேண்டியதன் அவசியத்தையும் Tam வலியுறுத்தினார்.
COVID தொற்றின் ஆறாவது அலையில் கனடா உள்ளது எனவும் Tam செவ்வாய்க்கிழமை (12) கூறினார்.
கனடா முழுவதும், Omicron மாறுபாடு பரவி வருவதை செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால் மூன்றாவது தடுப்பூசியை பெறவும், முகமூடி அணியவும், காற்றோட்டத்தை மேம்படுத்தவும் அறிவுறுத்துவதாக அவர் கூறினார்.
முகமூடி கட்டுப்பாடுகள் யூகங்களை அகற்றக்கூடும் என்பதை Dr. Tam ஏற்றுக் கொண்டார்.