தேசியம்
செய்திகள்

உக்ரைன் தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வர சீனா ஆக்கபூர்வமான பங்கு வகிக்க வேண்டும்: கனடா

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டு வர சீனா ஆக்கபூர்வமான பங்கு வகிக்க வேண்டும் என கனடா வலியுறுத்துகின்றது.

உக்ரைன் மீதான ரஷ்யப் போரை முடிவுக்குக் கொண்டுவர சீனாவின் பங்களிப்பு அவசியம் என வெளியுறவு அமைச்சர் Melanie Joly கூறினார்.

இந்தோனேசியா, வியட்நாமில் ஆகிய ஆசிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை செவ்வாய்க்கிழமை (12) Joly ஆரம்பித்தார்.

Liberal அரசாங்கத்தின் நீண்டகால வாக்குறுதியான Indo-Pacific மூலோபாயத்தை நடைமுறைப்படுத்துவது இந்த பயணத்தின் பிரதான நோக்கமாகும்.

தென்கிழக்கு ஆசியாவிற்கான பயணத்தின் முன்னர், சீன வெளியுறவு அமைச்சருடன் கனடிய வெளியுறவு அமைச்சர் தொலைபேசியில் உரையாடினார்.

September 2021க்குப் பின்னர், இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் உரையாடுவது இதுவே முதல் முறையாகும்.

Related posts

Pickering துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தமிழர் மரணம்

Albertaவில் செவ்வாய் அறிவிக்கப்படவுள்ள புதிய கட்டுப்பாடுகள்!

Gaya Raja

நாடு கடத்தலை எதிர் கொண்ட குடும்பத்தினர் சடலமாக மீட்பு

Lankathas Pathmanathan

Leave a Comment