Saskatchewan, Manitoba, Ontario மாகாணங்களின் சில பகுதிகளை பாரிய குளிர்கால புயல் தாக்கவுள்ளது.
செவ்வாய்க்கிழமை (12) இரவு தென்கிழக்கு Saskatchewan, தெற்கு Manitobaவில் பனிப்புயல் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடமேற்கு Ontarioவில், பனி புதன்கிழமை காலை ஆரம்பமாகி, வெள்ளிக்கிழமை வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் மின் தடை ஏற்படுவதுடன், போக்குவரத்து சவால்களும், பாடசாலைகள் மூடப்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் தோன்றியுள்ளன.
பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் பயணிப்பது ஆபத்தாக மாறக்கூடும் என சுற்றுச்சூழல் கனடா வாகன ஓட்டிகளை எச்சரித்துள்ளது .