ஆறாவது COVID அலைக்கு மத்தியில் முகமூடிப் பயன்பாட்டைத் தொடர வேண்டும் என Ontarioவின் தலைமை மருத்துவர் Dr. Kieran Moore பரிந்துரைத்துள்ளார்.
கடந்த ஒரு மாத காலத்தில் முதல் முறையாக திங்கட்கிழமை (11) Dr. Moore செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டார்.
Ontarioவில் விரிவாக்கப்பட்ட PCR சோதனை, சிகிச்சைகளுக்கான அறிவித்தலின் போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
தொற்றுகளின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையும் இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.
இந்த மாத இறுதியில் முகமூடிப் பயன்பாட்டை அகற்றுவதற்கான திட்டம் தீவிரமாக மதிப்பாய்வு செய்யப்படுவதாகவும் இந்த செய்தியாளர் சந்திப்பில் Dr. Moore கூறினார்.