தேசியம்
செய்திகள்

Ontarioவில் முகமூடி கட்டுப்பாடுகள் மீண்டும் அமுல்படுத்தப்பட வேண்டும்!.

Ontarioவில் முகமூடி கட்டுப்பாடுகள் மீண்டும் அமுல்படுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோருகின்றன.

Ontario மருத்துவமனைகளில் தொடர்ந்தும் 1,100க்கும் அதிகமானவர்கள் COVID தொற்றின் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மூன்று முக்கிய எதிர்க்கட்சிகள் பொது இடங்களில் கட்டாய முகமூடி விதிகளை மீண்டும் அறிமுகப்படுத்துமாறு Doug Ford அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கின்றன.

வியாழக்கிழமை (07) வெளியான தரவுகளின் அடிப்படையில், 1,126 பேர் Ontario வைத்தியசாலைகளில் தொற்றின் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கை புதன்கிழமை 1,074 ஆகவும், கடந்த வாரம் 807 ஆகவும் இருந்தது.

வியாழனன்று மேலும் 16 மரணங்களும் தொற்றின் காரணமாக Ontarioவில் பதிவானது.

அதேவேளை தொற்றின் மரணங்களின் எண்ணிக்கை கனடாவில் 38 ஆயிரத்தை அண்மிக்கிறது.

நாடளாவிய ரீதியில் மரணங்களின் எண்ணிக்கை கடந்த 14 நாட்களில் 6 சதவீதமும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 சதவீதமும் அதிகரித்துள்ளது.

Related posts

COVID எதிர் போராட்டங்களின் பிரதான அமைப்பாளருக்கான  பிணை மறுப்பு

Lankathas Pathmanathan

Quebecகில் தொடரும் காட்டுத்தீ எச்சரிக்கை

Lankathas Pathmanathan

75 வயதுக்கு மேற்பட்ட மூத்தவர்களுக்கான ஒரு முறை 500 டொலர் கொடுப்பனவு

Gaya Raja

Leave a Comment