தேசியம்
செய்திகள்

Ontarioவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் வியாழன் முதல் நான்காவது தடுப்பூசியை பெறலாம்

60 வயதிற்கு மேற்பட்ட Ontario வாசிகள் வியாழக்கிழமை (07) முதல் நான்காவது COVID தடுப்பூசியை பெற தகுதி பெற்றுள்ளனர்.

18 வயதிற்கு மேற்பட்ட First Nations, Inuit, Metis மக்களும் அவர்களது பழங்குடியினர் அல்லாத குடும்ப உறுப்பினர்களும் நான்காவது தடுப்பூசியை வியாழன் முதல் பெற தகுதி பெறுவார்கள் எனவும் மாகாணம் கூறுகிறது.

முதலாவது booster தடுப்பூசிக்கு பின்னர் பரிந்துரைக்கப்பட்ட ஐந்து மாத இடைவெளியில் நான்காவது தடுப்பூசி வழங்கப்படுகிறது.

வியாழக்கிழமை காலை 8 மணி முதல் நான்காவது தடுப்பூசியை பெறுவதற்கான முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்காவது தடுப்பூசிகள் ஏற்கனவே நீண்ட கால பராமரிப்பு இல்லங்கள், முதியோர் இல்லத்தில் வசிப்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு கிடைக்கின்றன.

இந்த நிலையில் இரண்டாவது booster தடுப்பூசிகள் இளையவர்களுக்கு அவசியமா என்பதை இன்னும் ஆய்வு செய்து வருவதாக நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு கூறுகிறது.

Related posts

இலங்கை கனேடியருக்கு அமெரிக்காவில் 32 மாத சிறைத் தண்டனை

Gaya Raja

B.C உலங்கு வானூர்தி விபத்தில் விமானி பலி

Lankathas Pathmanathan

Liberal அரசாங்கத்திற்கான ஆதரவைத் திரும்பப் பெறலாம்: NDP எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment