Quebec மாகாணம் முகமூடி கட்டுப்பாடுகளை April 30 வரை நீட்டிக்கிறது.
தொற்றுகளின் அதிகரிப்புக்கும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்புக்கும் மத்தியில் Quebec அரசாங்கம் குறைந்த பட்சம் April இறுதி வரை முகமூடி கட்டுப்பாடுகளை நீட்டிக்கிறது.
அடுத்த சில வாரங்களில், தொற்றாளர்களின் எண்ணிக்கையிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையிலும் அதிகரிப்பை எதிர்பார்ப்பதாக இடைக்கால பொது சுகாதார இயக்குனர் Dr. Luc Boilea தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமையுடன் Quebecகில் தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,479 ஆக பதிவாகியுள்ளது.
தற்போது Quebec, Prince Edward தீவு, Nunavut ஆகிய மாகாணங்களில் பொது இடங்களில் முகமூடி அணிய வேண்டும் என்ற நடைமுறை அமுலில் உள்ளது.
Quebec தற்போது ஆறாவது COVID அலைக்கு மத்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.