மத்திய அரசாங்க ஊழியர்களுக்கான புதிய COVID தடுப்பூசி கொள்கை புதன்கிழமை (06) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நடைமுறையில் உள்ள கொள்கையின்படி, வீட்டில் வேலை செய்பவர்கள் உட்பட அனைத்து மத்திய பொது சேவை உறுப்பினர்களும் முழுமையாக தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
கனடாவின் பொதுச் சேவைக் கூட்டமைப்பு இந்த கொள்கைக்கு எதிராக ஒரு மனத்தாங்கல் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
ஆறு மாதங்களுக்குப் பின்னர் இந்த கொள்கையை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது.
அந்த காலக்கெடு இந்த வாரத்தில் முடிவடைகிறது.
98 சதவீதத்திற்கும் அதிகமான மத்திய பொது ஊழியர்கள் தாங்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாக சான்றளித்துள்ளனர்.