வதிவிடப் பாடசாலை அமைப்பில் தேவாலயத்தின் பங்கிற்கு போப் பிரான்சிஸ் மன்னிப்பு கோரினார்.
வதிவிட பாடசாலையில் முதற்குடியினருக்கு இழைக்கப்பட்ட தவறுகளுக்கும், கத்தோலிக்க திருச்சபை உறுப்பினர்களின் இழிவான நடத்தைக்கும் கடவுளிடம் மன்னிப்பு கோருவதாக போப்பாண்டவர் வெள்ளிக்கிழமை (01) தெரிவித்தார்.
கனடிய ஆயர்களுடன் இணைந்து இந்த மன்னிப்பை கோருவதாக பிரான்சிஸ் கூறினார்.
கனடாவின் தேவாலயத்தால் நடத்தப்பட்ட வதிவிட பாடசாலைகளில் ஏற்பட்ட துஷ்பிரயோகங்கள் குறித்து தான் கோபமடைந்ததாகவும், வெட்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
வதிவிட பாடசாலைகளில் கத்தோலிக்க கல்வியாளர்கள் பூர்வீக அடையாளம், கலாச்சாரம், ஆன்மீக விழுமியங்களை மதிக்கவில்லை என வத்திக்கானில் நடைபெற்ற சந்திப்பில் போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.