Ontarioவில் எரிபொருளின் விலை மீண்டும் ஒரு உயர்வை எதிர்கொள்கிறது.
Ontarioவின் பெரும்பகுதியில் வெள்ளிக்கிழமை (01) எரிபொருளின் விலை லிட்டருக்கு ஆறு சதத்தினால் அதிகரித்து 173.9 சதமாக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
British Colombia மாகாணத்திலும் எரிபொருளின் விலை வெள்ளியன்று ஐந்து சதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதன்கிழமை Ontario, Quebec, British Colombia ஆகிய மாகாணங்களில் எரிபொருளின் விலை குறைவடைந்தது.
செய்வாய்கிழமை வெளியான மத்திய அரசாங்கத்தின் காலநிலை அறிவிப்பும், புதன்கிழமை அறிவிக்கப்பட்ட எண்ணெய் விலை ஏற்றமும், எரிபொருள் விலையை மீண்டும் உயர்த்துகிறது.