மாகாண தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்னதாக வீடு வாங்கும் வெளிநாட்டவர்களுக்கான வரியை உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
குடியுரிமை பெறாதவர்களுக்கான வரியை புதன்கிழமை (30) முதல் 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரிக்க உள்ளதாக செவ்வாய்க்கிழமை (29) வெளியிடப்பட்ட அறிக்கையில் மாகாண அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
இந்த வரியானது மாகாணம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தெற்கு Ontarioவில் உள்ள Greater Golden Horseshoe பிராந்தியத்தில் கொள்வனவு செய்யப்படும் சொத்துகளுக்கு மட்டுமே இது பொருந்தியிருந்தது
Ontarioவின் குடியுரிமை இல்லாத வீடு வாங்குபவர்கள் மீதான வரி முதன் முதலில் 2017இல் முன்னாள் முதல்வர் Kathleen Wynne தலைமையில் நடைமுறைக்கு வந்தது.
கடந்த மாதம் Toronto பெரும்பாகத்தில் உள்ள ஒரு வீட்டின் சராசரி விலை 1.3 மில்லியன் டொலரை தாண்டியது.
இது முந்தைய ஆண்டை விட 28 சதவீதம் அதிகரிப்பாகும்.