தேசியம்
செய்திகள்

குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் Ontario மாகாண சபை உறுப்பினர்

COVID எதிர்ப்பு போராட்டத்தின் எதிரொலியாக Ontario மாகாண சபை உறுப்பினர் Randy Hillier குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

திங்கட்கிழமை (28) காலை Ottawa காவல்துறை தலைமையகத்தில் 64 வயதான Hillier சரணடைந்தார்.

Freedom Convoy போராட்டத்தில் பங்கேற்றது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு திங்கள் மாலை Hillier நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறை அதிகாரியை தாக்கியது உட்பட மேலும் 9 குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்கிறார்.
தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள Hillier தயாராக உள்ளதாக அவரது அலுவலகம் திங்கள் மாலை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலில் 2007ஆம் ஆண்டு Ontario மாகாண சபைக்கு தெரிவான Hillier, 2019இல் Progressive Conservative கட்சியின் அவைக் குழுவில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார்.

அவர் இந்த ஆண்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan

கனடிய செய்திகள் – October மாதம் 08 ஆம் திகதி வியாழக்கிழமை

Lankathas Pathmanathan

தேசிய பாடசாலை உணவு திட்டத்தை உருவாக்கும் மத்திய அரசு

Lankathas Pathmanathan

Leave a Comment