February 22, 2025
தேசியம்
செய்திகள்

கனடிய முதற்குடியினருக்கும் போப் பாண்டவருக்கும் இடையில் இந்த வாரம் சந்திப்பு

கனடிய முதற்குடி தலைவர்களும் குடியிருப்பு பாடசாலைகளில் இருந்து தப்பியவர்களும் இந்த வாரம் போப்பாண்டவர் பிரான்சிசுடன் சந்திப்பொன்றை மேற்கொள்கின்றனர்.
First Nations, Inuit, Metis சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மொத்தம் 32 பிரதிநிதிகள். குடும்ப உறுப்பினர்கள் என ஒரு குழுவினர் கனடாவில் இருந்து ரோம் பயணமாகியுள்ளனர்.
ரோமில் நடைபெறும் சந்திப்பில் கனடாவின் குடியிருப்புப் பாடசாலை  அமைப்பில் கத்தோலிக்க திருச்சபையின் பங்குக்கு போப்பாண்டவர் மூலம் மன்னிப்பு கோரும்  நம்பிக்கையில் கனடிய குழுவினர் உள்ளனர்.
கனேடிய மண்ணில் போப்பாண்டவரின் பகிரங்க மன்னிப்புக்கும் மேலாக, முதற்குடி பிரதிநிதிகள் பூர்வீக கலைப் பொருட்கள், நிலங்களை திருப்பித் தருமாறு இந்த குழுவினர் தேவாலயத்திற்கு அழைப்பு விடுக்கின்றனர்.
அத்துடன் உயிர் பிழைத்தவர்கள், அவர்களது குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் எனவும் கோரப்படுகிறது.

இந்த சந்திப்பு முதலில் கடந்த Decemberரில் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனாலும் Omicron திரிபின் காரணமாக COVID தொற்றின் அதிகரிப்பின் எதிரொலியாக இந்த சந்திப்பு மூன்று மாதங்கள் பின் தள்ளப்பட்டது.

Related posts

மனைவியை கொலை செய்ததற்காக தமிழருக்கு 9 1/2 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

Gaya Raja

NATO கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு Brussels பயணமாகும் Trudeau

கனேடிய பூர்வீக தலைவர்கள், ஆளுநர் நாயகம், மன்னர் Charles சந்திப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment