தேசியம்
செய்திகள்

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் மேலும் பல புதிய வேட்பாளர்கள்

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் மேலும் பல புதிய வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.

கட்சியின் தலைமை பதிவிற்கு போட்டியிடும் நான்கு பிரதான வேட்பாளர்களான Pierre Poilievre, Jean Charest, Leslyn Lewis, Patrick Brown தவிர வேறு வேட்பாளர்களும் இந்த போட்டியில் களம் இறங்கியுள்ளனர்.

கடந்த நாட்களில் பல வேட்பாளர்கள் கட்சியின் தலைமைக்கான தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர்

முன்னாள் Huntsville நகர முதல்வரும், Parry Sound-Muskoka தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான Scott Aitchison, York Centre தொகுதியின் மாகாண சபை உறுப்பினர் Roman Baber, கிராமப்புற Saskatchewanனைச் சேர்ந்த தொழிலதிபர் Joseph Bourgault, Pitt Meadows-Maple Ridge தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Marc Dalton, முன்னாள் Conservative கட்சியின் தலைமை வேட்பாளர் Bobby Singh, முன்னாள் Aurora-Oak Ridges-Richmond Hill தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Leona Alleslev, York Centre தொகுதியின் முன்னாள் Conservative வேட்பாளர் Joel Etienne ஆகியோர் கட்சியின் தலைமைக்கு போட்டியிடும் வேட்பாளர்களாக உள்ளனர்.

கடந்த February ஆரம்பத்தில் கட்சி தலைமையில் இருந்து Erin O’Toole வெளியேற்றப்பட்டதை அடுத்து, ஐந்தாண்டுகளில் தங்கள் மூன்றாவது தலைவரை Conservative கட்சியினர் தேர்ந்தெடுக்கின்றனர்.

Conservative கட்சியின் புதிய தலைவர் September 10ஆம் திகதிக்குள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

Related posts

திங்கட்கிழமை முதல் ஆரம்பமான கனடாவின் புதிய எல்லை விதிகள்!

Gaya Raja

Omicron அலையின் போது 3 மில்லியன் பேர் Quebecகில் தொற்றால் பாதிப்பு

Lankathas Pathmanathan

கனடிய அரசியலில் வெளிநாட்டு குறுக்கீடு வலையமைப்புகள் ஆழமாக உட்பொதிந்துள்ளன: CSIS

Lankathas Pathmanathan

Leave a Comment