தேசியம்
செய்திகள்

Ontarioவில் கடந்த வருடம் 100,000 டொலர்களுக்கு அதிகமான ஊதியம் பெற்றவர்களின் பட்டியல் வெளியானது!

Ontario மின் உற்பத்தி நிறுவனத்தின் (electricity Crown corporation) தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான Kenneth Hartwick கடந்த வருடம் Ontario பொதுத்துறையில் அதிக ஊதியம் பெற்றவராக மீண்டும் பதிவாகியுள்ளார்

Ontarioவின் Sunshine List எனப்படும் 100,000 டொலர்களுக்கு அதிகமான ஊதியம் பெற்றவர்களின் பட்டியல் வெள்ளிக்கிழமை (25) வெளியானது.

இதில் Ontario Power Generation நிர்வாகிகள் மாகாணத்தில் அதிக சம்பளம் பெறும் முதல் நான்கு பொது ஊழியர்களாக உள்ளனர்.

Hartwick, 1,628,246 டொலர்களை கடந்த வருடம் ஊதியமாக பெற்றுள்ளார்.

முதல்வர் Doug Ford 208,974.00 டொலர்களையும், எதிர்க்கட்சித் தலைவர் Andrea Horwath 180,885.96 டொலர்களையும் ஊதியமாக பெற்றுள்ளனர்.

தமிழ் மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் 133,217.04 டொலர்களையும், லோகன் கணபதி 130,778.81டொலர்களையும் 2021ஆம் ஆண்டு ஊதியமாக பெற்றுள்ளனர்.

தவிரவும் பிரதான அரசியல் தலைவர்கள் பெற்ற ஊதியம்

Ontario பசுமை கட்சி (Green Party) தலைவர் Mike Schreiner: $125,874.00

Toronto நகர முதல்வர் Mayor John Tory: $197,316.08

Mississauga நகர முதல்வர் Bonnie Crombie: $144,294.80

Brampton நகர முதல்வர் Patrick Brown: $146,208.13

Oakville நகர முதல்வர் Rob Burton: $187,458.86

Burlington நகர முதல்வர் Marianne Meed Ward: $187,076.96

Vaughan நகர முதல்வர் Maurizio Bevilacqua: $194,119.58

Markham நகர முதல்வர் Frank Scarpitti: $253,416.08

Whitby நகர முதல்வர் Don Mitchell: $188,304.48

Oshawa நகர முதல்வர் Dan Carter: $143,430.59

Ottawa நகர முதல்வர் Jim Watson: $188,996.08

Windsor நகர முதல்வர் Drew Dilkens: $199,203.92

Hamilton நகர முதல்வர் Fred Eisenberger: $193,621.09

Niagara Falls நகர முதல்வர் Jim Diodati: $116,946.08

Barrie நகர முதல்வர் Jeff Lehman: $121,349.52

Kingston நகர முதல்வர் Bryan Paterson: $130,879.89

100,000 டொலர்களுக்கு மேல் ஊதியம் பெறும் பொதுத்துறை ஊழியர்களின் எண்ணிக்கை, 2020 முதல் 38 ஆயிரத்து 536 ஆக அதிகரித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது

Related posts

Ontario மாகாண சபை தேர்தலில் தமிழ் பெண் வேட்பாளர்!

Lankathas Pathmanathan

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் முதலாம் ஆண்டு நினைவை முன்னிட்டு கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி வெளியிட்ட அறிக்கை: Statement by Gary Anandasangaree, Canadian Member of Parliament, on First Anniversary of Easter Sunday Attacks in Sri Lanka:

Lankathas Pathmanathan

கடந்த ஆண்டு வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்தது!

Lankathas Pathmanathan

Leave a Comment