December 12, 2024
தேசியம்
செய்திகள்

வேலையற்றோர் விகிதம் கடந்த மாதம் குறிப்பிடத்தக்க மைல்கல்லை கடந்தது

கனடாவின் வேலையற்றோர் விகிதம் கடந்த மாதம் 5.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கனடிய புள்ளி விபரத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டது.

கனடாவின் வேலையற்றோர் விகிதம்  February மாதத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை கடந்ததைக் காட்டுகிறது.

இதன் மூலம் COVID தொற்றின் ஆரம்பத்தின் முன்னர் இருந்த நிலைக்கு வேலையற்றோர் விகிதம் குறைந்துள்ளது.

அதேவேளை மக்கள் தொகை அடிப்படையில் வேலையற்றோர் விகிதம் சீரற்ற மீட்சியை வெளிப்படுத்துகிறது.

சமீபத்திய கனடிய புள்ளி விபரத் திணைக்களத்தின் புள்ளி விவரங்களை February 2020 புள்ளி விவரங்களு டன் ஒப்பிடுகையில், கடந்த மாதம் 15 முதல் 24 வயதிற்குட்பட்டவர்களில் வேலையற்றோர் விகிதம் 8.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த விகிதம் 5.1 சதவீதம் அதிகரித்துள்ளது.

Related posts

2020ல் கனேடியர்களின் வருமானம் அதிகரித்துள்ளது

Lankathas Pathmanathan

புதிய இடைக்கால நெறிமுறை ஆணையர் நியமனம்

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 23ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Leave a Comment