முன்னாள் Toronto காவல்துறைத் தலைவர் Mark Saunders எதிர்வரும் மாகாணத் தேர்தலில் Progressive Conservative கட்சியின் வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.
Don Valley West தொகுதியின் வேட்பாளராக Saunders தேர்தலை எதிர்கொள்வார் என செவ்வாய்க்கிழமை (22) வெளியிடப்பட்ட அறிக்கையில் PC கட்சி அறிவித்தது.
Don Valley West தொகுதியின் PC கட்சி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெருமையடைவதாக Saunders தெரிவித்தார்.
இந்த தொகுதியை Liberal கட்சியின் சார்பில் முன்னாள் முதல்வர் Kathleen Wynne பிரதிநிதித்துவப்படுத்துகின்றா
ஆனாலும் அடுத்த தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Saunders 2015 முதல் 2020 வரை Toronto காவல் துறைத் தலைவராக பணியாற்றினார்.