தேசியம்
செய்திகள்

Vladimir Putinனின் பகுத்தறிவற்ற தன்மையை  கனடாவும், நட்பு நாடுகளும் எதிர்கொள்கிறது: வெளியுறவு அமைச்சர்

ரஷ்ய அதிபர் Vladimir Putinனின் பகுத்தறிவற்ற தன்மையை  கனடாவும், நட்பு நாடுகளும் எதிர்கொள்வதாக கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly தெரிவித்தார்.
சவாலான காலகட்டத்திற்கு எம்மை மாற்றியமைக்க வேண்டும் என கூறிய Joly, கனடிய இராணுவம் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ரஷ்யாவின் தாக்குதல்களை எதிர்கொள்ள கனடா உக்ரைனுக்கு அதிக இராணுவ உதவிகளை வழங்க வேண்டும் என அவர் கூறினார்.
ரஷ்யாவிற்கு எதிராக மேலும் தடைகளை அறிவிப்போம் எனவும் அமைச்சர் Joly தெரிவித்தார்.
பிரதமர் Justin Trudeau செவ்வாய்க்கிழமை (22) மாலை ஐரோப்பாவுக்கான பயணம் ஒன்றை ஆரம்பித்த நிலையில் வெளிவிவகார அமைச்சரின் இந்தக் கருத்துக்கள் வெளியானது.

தனது பயணத்திற்கு முன்னர் Trudeau,  உக்ரேனிய ஜனாதிபதியுடன் உரையாடினார்.

வரவிருக்கும் NATO, G7 கூட்டங்களுக்கு முன்னதாக மேலும் சர்வதேச உதவி குறித்து இரு தலைவர்களும் உரையாடியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது .

நாளை Brusselசில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதன் மூலம் Trudeau ஐரோப்பிய  நாடுகளுக்கான தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார்.

Related posts

கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறுவதற்கு எந்த சந்தர்ப்பமும் இல்லை: Justin Trudeau

Lankathas Pathmanathan

COVID எல்லைக் கட்டுப்பாடுகள் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு

CBSA ஊழியர்கள் இந்த வாரம் வேலை நிறுத்தம்?

Lankathas Pathmanathan

Leave a Comment