இந்த மாதத்தில் ஐரோப்பாவுக்கான தனது இரண்டாவது பயணத்தை கனடிய பிரதமர் Justin Trudeau இந்த வாரம் மேற்கொள்கின்றார்.
புதன்கிழமை (23) Brusselsசில் உள்ள ஐரோப்பிய நாடடாளுமன்றத்தில் Trudeau உரையாற்றவுள்ளார்.
ஜனநாயகத்தை பாதுகாக்க இரு கண்டங்களும் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை Trudeau தனது உரையில் வலியுறுத்துவார் என பிரதமர் அலுவலகம் திங்கட்கிழமை (21) தெரிவித்தது.
பிரதமர் வியாழக்கிழமை NATO தலைவர்களுடன் இணைந்து உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு இராணுவ கூட்டணியின் பதில் நடவடிக்கையை ஒருங்கிணைப்பார்.
வெள்ளிக்கிழமை கனடா திரும்பும் முன் G7 தலைவர்களின் கூட்டத்திலும் Trudeau பங்கேற்கவுள்ளார்.