கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு February மாதம் வாழ்க்கைச் செலவு உயர்ந்துள்ளது.
வருடாந்த பணவீக்கம் கடந்த மாதம் 5.7 சதவீதத்தை எட்டியது.
இது August 1991க்கு பின்னர் அதி உயர்ந்த நிலையிலான வருடாந்த பணவீக்க மாகும்.
அதேவேளை தொடர்ந்து இரண்டாவது மாதமாக பணவீக்கம் ஐந்து சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
எரிபொருள், மளிகைப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக பணவீக்கம் அதிகரித்துள்ளது.
இந்த பொருட்களின் விலை அதிகரிப்பு பணவீக்க விகிதங்கள் இன்னும் அதிகமாக்கும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.