February 23, 2025
தேசியம்
செய்திகள்

Belarus விமானங்கள் கனடாவில் தரை இறங்குவதற்கு தடை

Belarus விமானங்கள் கனடாவில் தரை இறங்குவதற்கு தடை செய்யப்படுகின்றது.

Belarus விமானங்கள் கனடிய வான்வெளிக்குள் நுழைய அனுமதிக்கப்படாது என மத்திய போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra புதன்கிழமை (16) அறிவித்தார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரின் எதிரொலியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் அண்டை நாடான Belarus, உக்ரைன் மீதான போரில் துணைப் பங்காற்றுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

கனடா தனது வான்வெளிக்குள் ரஷ்ய விமானங்கள் நுழைவதற்கும் ஏற்கனவே  தடை விதித்துள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில், ரஷ்யா, Belarus ஆகிய நாடுகளில் இருந்து வரும் பொருட்களுக்கு 35 சதவீத வரி விதிக்கப்படும் என கனடா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

குளிர்கால Olympics போட்டிகளை புறக்கணிக்கும் கனடா!

Lankathas Pathmanathan

1,600 கனடியர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறினர்!

Lankathas Pathmanathan

D-Day நிகழ்வில் பங்கேற்ற France பயணமாகும் பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment