தேசியம்
செய்திகள்

நெடுஞ்சாலை 401 விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் பலி

நெடுஞ்சாலை 401இல் ஏற்பட்ட விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் பலியாகினர்.

Ontarioவில் Belleville நகருக்கும் Trenton நகருக்கும் இடையில் சனிக்கிழமை (12) அதிகாலை 3:45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

ஒரு பார ஊர்தியுடன் பயணிகள் வாகனம் மோதியதில் வாகனத்தில் இருந்த 5 பேர் பலியாகினர்.

மேலும் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என OPP தெரிவித்தது.

இதில் பார ஊர்தி ஓட்டுநருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

பலியானவர்கள் Toronto பெரும்பாகம், Montreal ஆகிய பகுதிகளில் கல்வி கற்கும் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் என காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

21 வயதான Jaspinder Singh , 22 வயதான Karanpal Singh, 23 வயதான Mohit Chouhan, 23 வயதான Pawan Kumar, 24 வயதான Harpreet Singh ஆகியோர் சம்பவ இடத்தில மரணமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அந்த விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகாத நிலையில் OPP விசாரணைகளை தொடர்கிறது.

அதேவேளை இதுவரை குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவாகவில்லை.

Related posts

தட்டம்மை நோய் பரவல் குறித்து சுகாதார அமைச்சர் கவலை

Lankathas Pathmanathan

தமிழர் உட்பட 34 வீடு விற்பனை முகவர்கள் தேர்வில் மோசடி செய்ததற்காக வீடு விற்பனை உரிமையை இழந்தனர்!

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 21ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Leave a Comment