தேசியம்
செய்திகள்

உக்ரைனில் ரஷ்யா போர்க் குற்றம் இழைக்கிறது: கனடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த்

உக்ரைனில் ரஷ்யா போர்க் குற்றம் இழைப்பதாக கனடா பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மீதான கனடிய அரசின் கண்டனத்தை பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.

உக்ரைனில் 35 பேர் கொல்லப்பட்ட சமீபத்திய தாக்குதல் மன்னிக்க முடியாத ஆக்கிரமிப்பு எனவும் போர்க் குற்றங்கள் எனவும் அமைச்சர் ஆனந்த் குற்றம் சாட்டினர்.

இந்த சூழ்நிலையில் ரஷ்யா ஒரு பயங்கரமான ஆக்கிரமிப்பாளர் எனவும், போர்க்குற்றங்களைச் செய்கிறது எனவும் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த் கூறினார்.

இந்த சமீபத்திய தாக்குதல் மன்னிக்க முடியாத ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு மற்றொரு எடுத்துக்காட்டு எனவும், இந்த விடயத்தில் NATO கூட்டணி ஒன்றுபட்டுள்ளது எனவும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது கனேடிய ஆயுதப்படை உறுப்பினர்கள் உக்ரைனில் இல்லை எனவும், அவர்கள் போலந்து உட்பட பிற பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர் எனவும் ஆனந்த் கூறினார்.

உக்ரைன் மீதான அதன் ஆக்கிரமிப்பு காரணமாக சாத்தியமான போர்க் குற்றங்கள் குறித்து ரஷ்யா மீதான விசாரணையை விரைவுபடுத்துமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை (ICC) இந்த மாத ஆரம்பத்தில் கனடா கேட்டுக் கொண்டது.

Related posts

மீண்டும் அதிகரிக்கும் வட்டி  விகிதம்?

Lankathas Pathmanathan

Ontario மாகாண NDPயின் புதிய தலைவர் அறிவிப்பு

Lankathas Pathmanathan

Albertaவில் பொது சுகாதார அவசர நிலை அறிவிப்பு!

Gaya Raja

Leave a Comment