ரஷ்யாவுடனான போரில் வெற்றி பெற்று உக்ரைன் இறையாண்மை கொண்ட நாடாக நிலைத்திருக்க முடியும் என கனடிய பிரதமர் Justin Trudeau நம்பிக்கை தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தின் மூன்றாவது நாளான புதன்கிழமை (09) Trudeau ஜேர்மனியில் வெளியுறவுக் கொள்கை உரை ஒன்றை ஆற்றினார்.
இந்த நிகழ்வில் உக்ரைன் போரில் வெற்றி பெற முடியுமா என Trudeauவிடம் வினவப்பட்டது.
சந்தேகத்திற்கு இடமின்றி அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகாவும் Trudeau பதிலளித்தார்.
கனடா தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படும் எனவும் Trudeau தெளிவு படுத்தினார்.
ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதார தடைகள், மீண்டும் ஒரு சுதந்திரமான உக்ரைனை உறுதி செய்ய தேவையான வரையில் தொடரும் எனவும் Trudeau கூறினார்.