February 23, 2025
தேசியம்
செய்திகள்

ரஷ்யாவின் இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராட கனடா தயாராக உள்ளது: பிரதமர் Trudeau

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் இராணுவ ஆக்கிரமிப்பு தாக்குதல்களை எதிர்த்துப் போராட கனடா தயாராக உள்ளதாக பிரதமர் Justin Trudeau உறுதியளித்தார்.

நான்கு நாள் ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை(08) Latviaயாவில் பல சந்திப்புகளில் Trudeau  ஈடுபட்டார்.
Spain பிரதமர் Pedro Sanchez, Latvia பிரதமர் Krisjanis Karins, NATO பொதுச் செயலாளர் Jens Stoltenberg ஆகியோரை Trudeau சந்தித்தார்.

இந்த சந்திப்புகளில் பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்தும் பங்கேற்றார்.

இந்த சந்திப்பின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், NATOவின் நோக்கம் தற்காப்பு என Trudeau, Stoltenberg ஆகியோர் தெளிவுபடுத்தினர்.
Latviaயாவில் NATOவுடன் இணைந்த இராணுவ நடவடிக்கையை நீட்டிப்பதாகவும் Trudeau அறிவித்தார்.
Operation Reassurance  என பெயரிடப்பட்டுள்ள இந்த நடவடிக்கை  2023 இல் காலாவதியான இருந்தது
Latviaவில் NATO படைகளில் இணைந்து செயல்படும் கனேடியப் படையினரின் இராணுவ தளத்தையும் Trudeau பார்வையிட்டார்.
பிரதமர் Trudeau, Latviaவின் ஜனாதிபதி Egils Levitsசை சந்தித்து பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகள், இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதித்தார்.
செவ்வாய் இரவு  ஜேர்மனி பயணமாகும் Trudeau அங்கு இரண்டு தினங்கள் சந்திப்புகளில் ஈடுபடுவார்.

Related posts

கட்டாய தடுப்பூசி கொள்கைகள் : பிரதான இரண்டு கட்சிகளின் வேறுபட்ட நிலைப்பாடுகள்!

Gaya Raja

கட்டுப்பாடுகளை நீக்கப்போவதில்லை என Québec அறிவித்தல்

Lankathas Pathmanathan

Liberal கட்சியுடன் தொடர்ந்து செயல்படவுள்ள Anthony Housefather

Lankathas Pathmanathan

Leave a Comment