February 23, 2025
தேசியம்
செய்திகள்

அரசியலில் இருந்து விலகும் Ontarioவின் துணை முதல்வர்

எதிர்வரும் Ontario மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என துணை முதல்வரும் சுகாதார அமைச்சருமான Christine Elliott வெள்ளிக்கிழமை (04) அறிவித்தார்.

June மாதம் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அமைச்சர் Elliott  இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆனாலும்  இந்த அரசாங்கத்தின் இறுதி மூன்று மாதங்களுக்கு அமைச்சரவை தொடர ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார்.

வெள்ளிக்கிழமை காலை வெளியிடப்பட்ட அறிக்கையில் Elliott இதனை உறுதிப்படுத்தினார்.

தனது குடும்பத்தினருடன் ஆலோசித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தனது அறிக்கையில் மாகாண அரசியலில் இருந்து விலகுவதற்கான காரணத்தை அவர் குறிப்பிடவில்லை.

2006ஆம் ஆண்டு Elliot  முதன்முதலில் மாகாண சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Doug Ford தலைமையிலான Progressive Conservative அரசு 2018 இல் பதவியேற்றதிலிருந்து Elliott சுகாதார அமைச்சராக பணியாற்றுகிறார்.

இதன் மூலம் COVID தொற்றுக்கான அரசாங்கத்தின் பதில் நடவடிக்கையின் முன்னணியில் அவர் செயல்பட்டுள்ளார்.

மாகாணத்தின் வரலாற்றில் மிகவும் கடினமான காலகட்டங்களில் Ontarioவை வழிநடத்த உதவியதற்காக  Elliottக்கு முதல்வர் Doug Ford நன்றி தெரிவித்தார்.

இந்த பதவி விலகல் அறிவிப்பு Ford அமைச்சரவையில் இந்த ஆண்டு பதவி விலகும் இரண்டாவது மூத்த உறுப்பினராக Elliottட்டை மாற்றுகிறது.

நீண்டகால பராமரிப்பு அமைச்சராக பணியாற்றிய Rod Phillips, கடந்த January மாதம் தனது பதவி விலகலை அறிவித்தார்.

Related posts

Toronto நகர முதல்வர் இடைத் தேர்தல் வாக்களிப்பு வியாழன் ஆரம்பம்

Lankathas Pathmanathan

11 ஆண்டுகளின் பின்னர் கனடா, சீனா பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு

Lankathas Pathmanathan

கனடாவுடனான எல்லை மீண்டும் விரைவில் திறக்கப்பட வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறதா?

Gaya Raja

Leave a Comment