தேசியம்
செய்திகள்

பதவி விலகும் சுகாதார அமைச்சர் Elliott

Ontario மாகாண துணை முதல்வரும் சுகாதார அமைச்சருமான Christine Elliott பதவி விலகவுள்ளார்.

Elliott எதிர்வரும் June மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தெரியவருகிறது.

தனது அமைச்சரவைப் பதவிகளில் இருந்து விலகுவதாக Elliott வெள்ளிக்கிழமை அறிவிப்பார் என கூறப்படுகிறது

Doug Ford தலைமையிலான Progressive Conservative அரசு 2018 இல் பதவியேற்றதிலிருந்து Elliott சுகாதார அமைச்சராக பணியாற்றுகிறார்.

இதன் மூலம் COVID தொற்றுக்கான அரசாங்கத்தின் பதில் நடவடிக்கையின் முன்னணியில் அவர் செயல்பட்டுள்ளார்

அவரது பதவி விலகல் அறிவிப்பு Ford அமைச்சரவையில் இந்த ஆண்டு பதவி விலகும் இரண்டாவது மூத்த உறுப்பினராக Elliottட்டை மாற்றுகிறது

நீண்டகால பராமரிப்பு அமைச்சராக பணியாற்றிய Rod Phillips, கடந்த January மாதம் தனது பதவி விலகலை அறிவித்தார்.

Related posts

அதிக அளவில் maple syrup உற்பத்தி

Lankathas Pathmanathan

Nova Scotia வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு குழந்தைகளின் உடல் மீட்பு

Lankathas Pathmanathan

A.L. wild-card தொடரின் முதலாவது ஆட்டத்தில் Blue Jays தோல்வி

Lankathas Pathmanathan

Leave a Comment